உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாவில் வெற்றி பெற முடியாமல் போனது ஏன்? : மனம் திறந்த விக்னேஷ்

சினிமாவில் வெற்றி பெற முடியாமல் போனது ஏன்? : மனம் திறந்த விக்னேஷ்

ஆரம்பத்தில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த விக்னேஷ், விக்ரம் நடித்த 'சேது' படத்தில் நாயகனாக நடித்திருக்க வேண்டியவர். ஆனால் அவர் ஏனோ அப்போது நடிக்கவில்லை. பிற்காலத்தில் பெரிய நடிகராக வருவார் என்று கணிக்கப்பட்ட விக்னேஷ் ஒரே ஒரு வெற்றிக்காக தொடர்ந்து போராடும் நடிகராக மாறி தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

சினிமாவில் தன்னால் ஜெயிக்க முடியாததற்கு என்ன காரணம் என்பதை மனம் திறந்து பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது : ஒரு வெற்றியை நாம் தக்க வைத்துக் கொள்வது மிக முக்கியம். ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த வெற்றியை நான் கொண்டாடினேனே தவிர, அதை அடுத்தகட்ட வளர்ச்சிக்குப் பயன்படுத்த தெரியவில்லை. அந்த சமயத்தில் எனக்கு வழிகாட்ட யாருமே இல்லை. அதுவே எனக்குப் பெரிய மைனஸ் ஆகிவிட்டது. சென்னைக்கு வந்த புதிதில் எனக்குத் தங்க இடமில்லை. தெரிந்தவர்களும் யாரும் இல்லை. என்னுடைய உழைப்பாலும் முயற்சியாலும்தான் எல்லாவற்றையும் உருவாக்கிக் கொண்டேன்.

அஜித், விஜய் போன்று அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகும் வாய்ப்புகள் எனக்கு இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், அப்போது எனக்கு இது புரியவில்லை. 'கிழக்குச் சீமையிலே' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, பல தயாரிப்பாளர்கள் என்னிடம் அட்வான்ஸ் கொடுத்தார்கள். அது நல்ல கதையா, பெரிய இயக்குனரா என்று யோசிக்காமல் அந்தப் படங்களில் நடித்தேன்.

'சின்னத்தாயி', 'கிழக்குச் சீமையிலே' படங்கள் பெரிய ஹிட்டான பிறகு, பெரிய இயக்குநர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் என்னை அணுகியபோது, என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனது. முன்பே அட்வான்ஸ் வாங்கிப் படங்களை ஒப்புக்கொண்டதால், பெரிய வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட்டேன். நான் நடித்த சில தவறான முடிவுகள் எனக்கு பின்னடைவை தந்தன.

இவ்வாறு விக்னேஷ் கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2026-06-02 20:43:07

இல்லை என்றாலும் நீ பெருசா வந்து இருக்க மாட்டே அது உனக்கே தெரியும்., சுறுசுறுப்பு ஆளு நீ ஹீரோ தான் நடிப்பேன் னு சொல்லாம நல்ல ரோல் ல நடிச்சி இருந்தால் கூட நல்ல பேரோட இருந்து இருப்பே