உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பெத்தி' படத்திற்கு டிக்கெட் உயர்வு ஆணை அளித்தது தெலுங்கானா அரசு

'பெத்தி' படத்திற்கு டிக்கெட் உயர்வு ஆணை அளித்தது தெலுங்கானா அரசு

ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் நாளை(ஜூன் 4) வெளியாக உள்ள தெலுங்குப் படம் 'பெத்தி'. தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒரு வாரத்திற்கு டிக்கெட் கட்டண உயர்வை, தெலுங்கானா அரசும், ஆந்திர அரசும் அளிப்பது வழக்கம்.

ஆனால், 'பெத்தி' படத்திற்கான டிக்கெட் கட்டண உயர்வு ஆணையை தெலுங்கானா அரசு நேற்று இரவு தான் அளித்தது. அதனால், முன்பதிவு அதன்பின்தான் ஆரம்பமானது. அதேசமயம், ஆந்திர அரசு கடந்த வாரமே அரசாணையை பிறப்பித்திருந்தது.

தெலுங்கானா அரசு அளித்த ஆணையில் சிங்கிள் தியேட்டர்கள் 100 ரூபாயும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் 125 ரூபாயும் உர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்து இன்றிரவு 8 மணிக்கு சிறப்பு பிரிமியர் காட்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள். ஆனால், ஒரே ஒரு காட்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இப்படத்தின் ஆன்லைன் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் சுமார் 30 கோடி வரையில் முன்பதிவு நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !