உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கில்லர் படப்பிடிப்பு தளத்தில் விபத்து நடந்தது எப்படி

கில்லர் படப்பிடிப்பு தளத்தில் விபத்து நடந்தது எப்படி

எஸ்.ஜே.சூர்யா நடித்து இயக்கும் படம் கில்லர். இந்த படத்தின் கதையை கொரோனா காலத்திலேயே எஸ்.ஜே.சூர்யா எழுதிவிட்டார். ஆனால், மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இதை அப்போது நடித்து, அவரால் இயக்க முடியவில்லை. இந்த படத்துக்காக சில கோடி மதிப்பில் ஒரு சொகுசு கார் வாங்கினார். அந்த காரும் படத்தில் முக்கிய கேரக்டராக வருகிறது. ஒரு வாடகை கொலைகாரனை பற்றிய கதையே கில்லர். இதில் அயோத்தி ப்ரீத்தி அஸ்ராணி ஹீரோயின்.

சென்னை பின்னி மில்லில் 3 வாகனங்களை வெடிக்க வைக்கும் காட்சி படமாக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணி அளவில் அவை வெடிக்க வைக்க, பயர்பாலுக்கு கேஸ் நிரப்பும் பணியில் 4 ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கேஸ் செல்லும் குழாயில் லீக் ஏற்பட, அது வெடித்துள்ளது. அப்போது சம்பவ இடத்தில் இருந்த ஸ்பெஷல் எபக்ட் யூனியனை சேர்ந்த 4 பேர் காயம் அடைந்தனர். மதன் என்பவர் உயிரிழக்க, மற்றவர்கள் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

மறைந்த மதன் சினிமா சங்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இது போன்ற ரிஸ்கான நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இருக்கும். கில்லர் படப்பிடிப்பில் அது இருந்ததா என தெரியவில்லை. தவிர, போலீசில் முறைப்படி அனுமதி வாங்கினார்களா என்பதும் தெரியவில்லை.

எஸ்.ஜே.சூர்யா துாரத்தில் இருந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காயமடைந்த சிலருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. இனியாவது இப்படிப்பட்ட ரிஸ்க்கான காட்சிகள் எடுக்கப்படும்போது தகுந்த முன்னேற்பாடுகள், பாதுகாப்பு வழிமுறைகளை போலீஸ், தீயணைப்பு துறையினர் உதவியுடன் பின்பற்றப்பட வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !