இயக்குனர் ஆக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸ் மகள்!
ADDED : 106 days ago
நடன கலைஞர் ஆக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்பு நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்களை எடுத்து வெற்றி பெற்றவர் ராகவா லாரன்ஸ். அவரின் தம்பி எல்வின் கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது ராகவா லாரன்ஸ் குடும்பத்தில் இருந்து மற்றொருவர் திரையுலகிற்கு வருகிறார் என கூறப்படுகிறது. அதன்படி, ராகவா லாரன்ஸின் மகள் ராகவி இப்போது திரையுலகில் இயக்குனர் ஆக அடி எடுத்து வைக்கிறார். இவர் அமெரிக்காவில் சென்று இயக்குனர் ஆகுவதற்கு படித்து வந்துள்ளார். யாரிடமும் உதவி இயக்குனராக பணி புரியாமல் நேரடியாக இயக்குனர் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ராகவா லாரன்ஸ் தயாரிக்கின்றார் என்கிறார்கள்.