ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ்
2026ம் ஆண்டில் கடந்த வாரத்துடன் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 100ஐக் கடந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்கள் வெளியாவது வழக்கமாக இருந்தது. ஆனால், மே மாதத்தில் அது அப்படியே குறைந்துவிட்டது. மே மாதத்தில் மொத்தமாகவே 10 படங்கள் மட்டுமே வெளியானது.
கடந்த வாரம் ஜூன் 5ம் தேதி “இரட்டையர், பரிமளா அண்ட் கோ, சம்ஹாரம், சன்னிதானம் பிஓ”, ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த வாரம் ஜூன் 12ம் தேதி கடந்த வாரத்தை விட அதிகப் படங்கள் வெளியாக உள்ளன.
இதுவரையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபடி, “ஆட்டி, சாருகேசி, டபுள் ஆக்குபன்சி, ஹபீபி, மூன்றாம் கண், நிழல், வள்ளுவன், வருகை பதிவேடு'' ஆகிய 8 படங்கள் வெளியாக உள்ளன.
மார்ச் 13ம் தேதி ஒரே நாளில் 8 படங்கள் வெளியாகின. சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த வாரம்தான் மீண்டும் 8 படங்கள் வரை வெளியாக உள்ளன. இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள் அனைத்துமே சிறிய படங்கள்தான்.
பள்ளிகள் திறந்து சில நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. அந்த பரபரப்பில் இருக்கும் குடும்பத்தினர் இந்த வாரம் வெளியாக உள்ள இத்தனை சிறிய படங்களைத் தியேட்டர்கள் பக்கம் வந்து பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான்.