உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு

ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு

மிஸ்டர் எக்ஸ் படத்தை அடுத்து வேட்டுவம், அனந்தன் காடு மற்றும் தனது 40வது படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா. இதில் அவரது 40வது படத்தை நிகில் முரளி இயக்குகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகிய இருவரும் நடித்துள்ளார்கள்.

வைஷ்ணவி சைதன்யா தனது இணைய பக்கத்தில் ஆர்யாவுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதோடு, சிரிப்பும் அன்பும் நிறைந்த படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும் எங்களது புன்னகைகள் நிலைத்திருக்கும் என்று வைஷ்ணவி சைதன்யா பதிவிட்டுள்ளார்.

அவரை தொடர்ந்து நிகிலா விமல் தனது பதிவில் , படப்பிடிப்பு நிறைவு. வீட்டிற்கு புறப்பட்டு விட்டேன். விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம் என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ஆர்யா 40 -வது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். மேலும் இந்த படத்தை ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா ஆகிய இருவரும் தி ஷோ பீப்பிள் என நிறுவனத்தின் மூலம் தயாரித்து உள்ளார்கள் . இப்படத்தின் டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !