உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை

சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் சலீம் குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவரின் இறுதி சடங்கின் போது அவரது வீட்டின் முன் நூற்றுக்கணக்கான யு டியூப்பர்கள் குவிந்தனர். அவர்கள் கேமரா மற்றும் செல்போன்கள் மூலம் அங்கு நடந்தவற்றை படம் பிடித்தனர். இதனால் சலீம் குமாருக்கு அஞ்சலி செலுத்த வந்த முன்னணி நடிகர், நடிகைள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார்கள்.

ஒரு கட்டத்தில் இதை சமாளிக்க முடியாத சலீம் குமாரின் மகன் சந்து சத்தம்போட்டு யு டியூப்பர்களை பிடித்து தள்ளி வெளியேற்றினார். இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. போலீசாரும் வரவழைக்கப்பட்டு யு டியூப்பர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் போலீசார் தங்களின் வலைதளத்தில் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரு தனிநபரின், சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அவருடைய அனுமதி இல்லாமல், வீடியோவோ, புகைப்படமோ எடுத்து வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2000 பிரிவு 66 படி 2 வருடம் வரை சிறைத்தண்டனையும், 2 லட்சம் வரை அபராதமும் விதிக்க முடியும் என்று யு டியூப்பர்களை எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !