உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர்

வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர்

புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், ராம்சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'பெத்தி'. தற்போது 300 கோடி வசூலைக் கடந்து இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக இப்படத்தின் மும்பை, டில்லி, விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் நடந்த படத்தின் விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்தார் ஜான்வி கபூர். படம் பற்றிய அப்டேட்களை அவரது இன்ஸ்டா தளத்திலும் தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.

ஆனால், படம் வெளியான பின்பு அப்படம் பற்றிய எந்த ஒரு அப்டேட்டையும் ஜான்வி கபூர் பகிரவில்லை. படத்தின் வசூல் நிலவரம் நன்றாக இருந்தாலும் அதைக் கூட அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிடவில்லை.

படம் வெளியான பின்பு ஜான்வி கபூரை படத்தில் கிளாமருக்காக மட்டுமே பயன்படுத்தியதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அதற்கு தன்னுடைய வருத்தத்தையும் தெரிவித்திருந்தார் இயக்குனர் புச்சிபாபு. ஒருவேளை தன்னைப் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்களால் ஜான்வி இப்படத்தைத் தற்போது தவிர்க்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !