விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்?
தமிழ் சினிமாவில் உள்ள விஜய் நடிகர்களில், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஆகிய நடிகர்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஸ்லம்டாக்' படத்தின் டீசர் மற்றும் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'நூறு சாமி' படத்தின் டிரைலர் ஆகிய இரண்டும் நேற்று மாலை வெளியாகின.
இரண்டு படங்களும் வித்தியாசமான கதைக்களம், கதாபாத்திரங்கள் என அவர்களுக்கு ஒரு மாற்றத்தைத் தரும் படங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யு டியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'ஸ்லம்டாக்' படத்தின் தமிழ் டீசர் இதுவரையில் 2 லட்சம் பார்வைகளைக் கூடத் தாண்டவில்லை. அதே சமயம் அதன் தெலுங்கு டீசர் 12 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழை விட தெலுங்கு பார்வை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தெலுங்கு இயக்குனர் இயக்கி இருப்பதால், இந்தப் படத்தை ஒரு தெலுங்குப் படம் என ரசிகர்கள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. தமிழிலும் பெரிய வரவேற்பைப் பெற வேண்டுமென்றால் இதை படக்குழு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதேசமயம் யு டியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'நூறு சாமி' படத்தின் தமிழ் டிரைலர் இதுவரையில் 4 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இதன் தெலுங்கு டிரைலர் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் தமிழ் ரசிகர்களை விடவும், தெலுங்கு ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கும், விஜய் ஆண்டனிக்கும் நல்ல வரவேற்பு தருவார்கள் எனத் தெரிய வருகிறது.