உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிளைமாக்ஸை ரசிகர்கள்தான் யூகிக்க வேண்டும் : 'மூன்றாம் கண்' இயக்குநரின் புதிய முயற்சி

கிளைமாக்ஸை ரசிகர்கள்தான் யூகிக்க வேண்டும் : 'மூன்றாம் கண்' இயக்குநரின் புதிய முயற்சி

டிரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹோர்ஸ் ஸ்டூடியோ சார்பில கே.சசிகுமார் தயாரிக்கும் படம் 'மூன்றாம் கண்'. விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ராதா ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கி உள்ளார். படம் நாளை வெளிவருகிறது.

படம் பற்றி இயக்குநர் கூறியதாவது: 'ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும்' எனும் கேயாஸ் விதியின்படி ஹைபர்லிங்காக இணைந்த நான்கு கதைகளுடன், ரஷோமான் எபெக்ட்டுடன், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்டர் மிஸ்டரி கலந்த க்ரைம் திரில்லராக உருவாகியுள்ளது. வித்தியாசமான கமர்ஷியலான திரைக்கதையைக் கொண்ட படம்.

இதில் விருமாண்டி, விண்டேஜ் பாயிண்ட் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கான ராஷ்மோன் எபெக்ட் என்ற சுவாரஸ்யமான விஷயத்தை பயன்படுத்தியிருக்கிறோம். இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதை கேட்ட உடனேயே நம்பிக்கை வைத்து இணைந்தனர்.

ஒரு மூடப்பட்ட தொழிற்சாலையின் உள்ளே ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். வெவ்வேறு காரணங்களுக்காக நான்கு பேர் அந்த தொழிற்சாலைக்குள் செல்கிறார்கள். நால்வருமே நாம்தான் அவரை கொலை செய்து விட்டோமோ என்ற பயத்துடன் அதிலிருந்து தப்பிக் முயற்சிக்கிறார்கள். ஆனால் உண்மையில் கொலை செய்தது நால்வருமே இல்லை. அந்த 5வது நபர் யார் என்பதை பார்வையாளர்கள் தங்கள் யூகத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம். இது மிக எளிதானதுதான் என்றாலும் ரசிகர்களையும் படத்தின் கதைக்குள் கொண்டு வரும் முயற்சி இது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !