அய்யனார் ஆக விஜய்: சற்குணம் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்!
ADDED : 2 hours ago
தமிழில் 'களவாணி 1, 2, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டி வீரன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சற்குணம். சமீபத்தில் இவரது இயக்கத்தில் 'எக்ஸாம்' என்கிற வெப் தொடர் வெளியானது.
தற்போது சற்குணம் அளித்த பேட்டியில் விஜய்யை வைத்து இயக்கவிருந்த படம் குறித்து கூறியதாவது, களவாணி படத்தை விஜய் சாருக்கு திரையிட்டோம். அவர் அந்த படத்தை பார்த்து முடித்தவுடன் அவருக்காக ஒரு கதை வைத்துள்ளேன் என கூறினேன். அதன் பின்னர் ஒரு நாள் என்னை அவரது நீலாங்கரை இல்லத்திற்கு அழைத்து கதை கேட்டார். அவருக்கு 'அய்யனார்' என்கிற தலைப்பில் ஒரு கதை கூறினேன். நகைச்சுவைக்கு வடிவேலு, வில்லன் ஆக நானா படேகர் என உதாரணம் கூறி கதை கூறினேன். முழு கதையும் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், கால சூழலால் அந்த படம் நடக்கவில்லை. இன்னும் அந்த கதை அப்படியே தான் உள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.