தெலுங்கு சினிமாவிற்கு நடையை கட்டிய ஹரி!
ADDED : 40 minutes ago
கடந்த ஆண்டு நடிகர் பிரசாந்த்தின் பிறந்தநாள் தினத்தன்று பிரசாந்த்தின் 55வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானது.
ஒரு வருடமாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஹரி இந்த கதையை நடிகர் அதர்வாவை வைத்து இயக்குவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஹரி சமீபத்தில் தெலுங்கு சினிமாவின் மாஸ், மசாலா ஹீரோவான ரவி தேஜாவை சந்தித்து கதை கூறியுள்ளார். இந்த கதை ரவி தேஜாவிற்கு பிடித்துள்ளதால் இதன் திரைக்கதை விவாத பணிகளை ஹரி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.