உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கங்கனா படத்திற்கு டில்லியை தொடர்ந்து ஹரியானா அரசும் வரி விலக்கு

கங்கனா படத்திற்கு டில்லியை தொடர்ந்து ஹரியானா அரசும் வரி விலக்கு


பாலிவுட்டில் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள 'பாரத் பாக்ய விதாதா' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. கடந்த 2008ல் மும்பையில் நடைபெற்ற தாக்குதலின் போது அங்கிருந்த பிரபல மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் வெளிப்படுத்திய தைரியம் மற்றும் தியாகத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. இதில் கங்கனா ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் மனோஜ் டபாடியா இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் உஜ்ஜைனியில் நடைபெற்ற இந்த படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி இந்த படத்திற்கு வரிவிலக்கு கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக டில்லி முதல்வரும் இந்த படத்திற்கு வரி விலக்கு அளிப்பதாக அறிவித்த நிலையில், தற்போது இன்னொரு மாநிலத்தின் வரி விலக்கையும் இந்த படம் பெற்றிருப்பது குறித்து படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !