உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பெத்தி'யை தொடர்ந்து 'புஷ்பா' இயக்குனர் சுகுமாருடன் இணையும் ராம்சரண்!

'பெத்தி'யை தொடர்ந்து 'புஷ்பா' இயக்குனர் சுகுமாருடன் இணையும் ராம்சரண்!


தெலுங்கில் ராம்சரண் நடித்துள்ள 'பெத்தி' படம் திரைக்கு வந்து 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தின் மூலம் 'கேம் சேஞ்சர்' படத்தின் தோல்வியில் இருந்து மீண்டு வந்துள்ளார் ராம்சரண். இந்த நிலையில், தனது அடுத்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார் ராம்சரண். அந்த படத்தை அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய சுகுமார் இயக்கப் போகிறார்.

என்றாலும் இந்த படத்திற்கான திரைக்கதையை எழுதி முடிக்கும் பணிகள் இன்னும் முடியவில்லை என்பதால் ராம்சரணின் 17வது படமான அந்த படத்தின் படப்பிடிப்பு தசரா பண்டிகைக்கு பிறகு தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு, பெத்தி படத்தில் நடித்து வந்தபோது ராம்சரணின் கையில் அறுவை சிகிச்சை செய்தார். அதனால் அடுத்த படத்தை தொடங்குவதற்கு முன்னதாக தனது உடல் தோற்றத்தை மாற்றி அமைக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். அதோடு, சுகுமார் தனது 17வது படத்தின் திரைக்கதையை முடிக்கும் வரை காத்திருக்காமல், மற்றொரு படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கி, ஒரு நேரத்தில் இரண்டு படங்களிலும் மாறி மாறி நடிப்பதற்கும் திட்டமிட்டுள்ளாராம் ராம்சரண்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !