உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தீனா' படத்திலிருந்து என்னை விலக விடாமல் தடுத்தவர் சசி ; ஏ.ஆர். முருகதாஸ் புதிய தகவல்

'தீனா' படத்திலிருந்து என்னை விலக விடாமல் தடுத்தவர் சசி ; ஏ.ஆர். முருகதாஸ் புதிய தகவல்


கடந்த 2001ல் அஜித் நடிப்பில் வெளியான 'தீனா' படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஏ.ஆர். முருகதாஸ். அந்த வெற்றியின் மூலம் தற்போது வரை முன்னணி இயக்குநர்களின் வரிசையில் இடம் பிடித்து வருகிறார். ஆனால் அந்த படத்திலிருந்து தான் விலக நினைத்ததாகவும், தனக்கு ஆதரவாக நின்று அந்த படத்தில் தன்னை பணியாற்ற வைத்தவர் இயக்குநர் சசி தான் என்கிற தகவலை சமீபத்தில் கூறியுள்ளார் இயக்குநர் முருகதாஸ்.

விஜய் ஆண்டனியை வைத்து சசி இயக்கியுள்ள 'நூறு சாமி' படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏ.ஆர். முருகதாஸ் பேசும்போது, “தீனா திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்தபோது, பல்வேறு அழுத்தங்கள் மற்றும் சவால்களை சந்தித்தேன். ஒரு கட்டத்தில் படத்தையே விட்டுவிட்டு வெளியேற வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த சமயத்தில் எனது நெருங்கிய நண்பரான சசி தான் என்னை சமாதானப்படுத்தி, 'இது ஒரு பெரிய வாய்ப்பு, கைவிடாதே' என்று உற்சாகப்படுத்தினார். அந்த ஆதரவு இல்லை என்றால் தீனா திரைப்படத்தை நான் இயக்கியிருக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !