உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாகை சந்திரசேகருக்கு யுவ புரோஸ்கர் விருது அறிவிப்பு

வாகை சந்திரசேகருக்கு யுவ புரோஸ்கர் விருது அறிவிப்பு

புது டில்லியில் உள்ள இயல், இசை, நடனம், நாடகத்திற்கான தேசிய அகாடமியான 'சங்கீத நாடக அகாடமி' 2024-2025-ம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளுக்கு, இசை, நடனம், நாடகம், பாரம்பரிய, நாட்டுப்புற, பழங்குடியின கலைகள், ஒட்டுமொத்த பங்களிப்பு, ஆய்வுப் பணி போன்ற துறைகளைச் சேர்ந்த 108 கலைஞர்களை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.

இதில் திரைப்படத்துறை மற்றும் நடிப்பு, கலை வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பை தந்ததற்காக தமிழ் நடிகர் வாகை சந்திரசேருக்கு அகாடமியின் யுவ புரோஸ்கர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை விரைவில் நடக்க இருக்கும் விழாவில் ஜனாதிபதி வழங்குவார்.

வாகை சந்திரசேகர், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி 'புதிய வார்ப்புகள்' படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதன்பிறகு சுவரில்லாத சித்திரங்கள், நிறம் மாறாத பூக்கள், ஒரு தலைராகம், நிழல்கள், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

கடைசியாக 'தேசிய தலைவர்' படத்தில் நடித்தார். சின்னத்திரையில் அப்பா, வேப்பிலைக்காரி, தெக்கத்தி பொண்ணு, வசந்தம் தொடர்களில் நடித்தார். திமுக சார்பில் வேளச்சேரி தொகுதியில் எம்எல்ஏ.,வாக ஆனார். கடந்த ஆட்சியின் போது இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !