இந்த வீடியோக்களுக்கு ஒரு 'எண்ட்' கிடையாதா?
ஒரு படத்தின் டிரைலர் வெளியாக வேண்டும், முதல் சிங்கிள் வெளியாக வேண்டும் என்றால் அது குறித்து ரீல்ஸ் வடிவில் ஒரு வீடியோ எடுத்து வெளியிடுவது இப்போது வழக்கமாகி உள்ளது.
சிலம்பரசன், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர்தான் இதை எப்போதோ ஆரம்பித்து வைத்ததாகச் சொல்கிறார்கள். இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் இதை அதிகமாகப் பிரபலப்படுத்தினார்கள். சிவகார்த்திகேயனும் இப்படி சில வீடியோக்களை வெளியிட்டார்.
கடந்த இரண்டு நாட்களில் இப்படியான வீடியோக்கள் அடுத்தடுத்து வந்து ரசிகர்களை நிறையவே சோதிக்கின்றன. இந்த அடுத்தடுத்த வீடியோக்களில் ஜிவி பிரகாஷ் தான் முக்கியமாக இருக்கிறார்.
நேற்று முன்தினம் அவரது அடுத்த தெலுங்குப் பட இசை குறித்து அவரும், படத்தின் இயக்குனர் அனில் ரவிப்புடி இருவரும் இணைந்த வீடியோ ஒன்று வெளியானது.
அடுத்து நேற்று காலையில் 'மகுடம்' படத்திற்காக ஜிவி பிரகாஷ்குமார், விஷால் பங்கேற்ற வீடியோ ஒன்றும், அடுத்த இரண்டு மணி நேரத்தில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்திற்காக ஜிவி பிரகாஷ்குமார், மமிதா பைஜு இடம் பெற்ற வீடியோ ஒன்றும் வெளியானது.
அடுத்தடுத்து இப்படி வெளிவந்த வீடியோக்களில் எந்த ஒரு சுவாரசியமும் இல்லை. 'க்ரின்ச்' ஆக இப்படி வீடியோ வெளியிடுவதற்கு ஒரு 'எண்ட்' கிடையாதா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.