உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்தடுத்து திரையுலகினரை சந்திக்கும் முதல்வர் விஜய்

அடுத்தடுத்து திரையுலகினரை சந்திக்கும் முதல்வர் விஜய்


தமிழக முதல்வராகப் பதவி ஏற்றிருப்பது ஒரு நடிகர் என்பதால் அவரை அடிக்கடி திரையுலகினர் குறிப்பாக நடிகர்கள் சந்தித்துப் பேசுவது வாடிக்கையாக உள்ளது.

நேற்று மட்டும் ஒரே நாளில் நடிசை சிம்ரன் மற்றும் அவரது கணவர், மகன்கள் அடுத்து நடிகர் சிலம்பரசன், நடிகர் ஷாம், இன்று காலை நடிகர் சங்க செயலாளர் விஷால் என சந்திப்பு தொடர்ந்துள்ளது.

இதற்கு முன்பு இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், ஏஆர் முருகதாஸ், ஆர்ஜே பாலாஜி, நடிகர்கள் பார்த்திபன், அர்ஜுன், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, சாந்தனு, சுந்தர் சி - குஷ்பு குடும்பத்தினர், இசையமைப்பாளர் தமன் என பலரது சந்திப்புகள் நடந்துள்ளது.

மாலை 6 மணிக்கு மேல் முதல்வர் விஜய் திரையுலகினரை சந்திக்க நேரம் ஒதுக்குவதாகக் கூறப்படுகிறது.

நேற்று மட்டும் தமிழகத்தில் 12 பாலியல் கொடுமைகள் நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதே சமயம் அது குறித்து எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்காமல் நடிகர்கள் சந்திக்க நேரம் ஒதுக்கும் முதல்வர் விஜய் மீது கடும் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !