உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விக்ரம் வழியில் விஜய் ஆண்டனி

விக்ரம் வழியில் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் சம்பளம் வாங்கிக் கொள்ள வேண்டும் என இதற்கு முன்பு கோரிக்கை வைத்திருந்தார்கள். ஹிந்தி, தெலுங்கில் சில முன்னணி நடிகர்கள் இப்படித்தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அது போலவே தமிழிலும் வாங்க வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதை தமிழில் இப்போது ஆரம்பித்து வைத்திருப்பவர் விக்ரம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஆனந்த் சங்கர் இயக்த்தில் அவர் நடித்து வரும் படத்திற்கு லாபத்தில் பங்கு என்ற விதத்தில்தான் சம்பளம் பேசியுள்ளதாகத் தகவல் வெளியானது. அவரை அடுத்து தற்போது விஜய் ஆண்டனி அதே போல சம்பளம் வாங்க ஒப்புக் கொண்டுள்ளார் என்று சொல்கிறார்கள்.

'அயோத்தி' படத்தை இயக்கிய மந்திரமூர்த்தி இயக்கும் படத்திற்காகத்தான் விஜய் ஆண்டனி இப்படி செய்துள்ளாராம். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான குட் ஷோ இதற்கான கோரிக்கையை வைத்ததும் விஜய் ஆண்டனி ஓகே சொல்லிவிட்டாராம்.

விக்ரம், விஜய் ஆண்டனி வழியில் அடுத்து யார் இப்படி சம்பளம் வாங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்தில் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !