உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின் தர்மன் படம் ஹாலிவுட் தொடரின் ரீமேக்கா? இயக்குனர் பதில்

ரஜினியின் தர்மன் படம் ஹாலிவுட் தொடரின் ரீமேக்கா? இயக்குனர் பதில்

நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர்- 2 படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் ரஜினிகாந்த். அந்த படத்தை முடித்த கையோடு கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தர்மன் படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் 173 வது படமான இதில் அவருடன் சிம்ரன், ராஷி கண்ணா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் ஆரம்ப விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படம் துவக்கத்தன்று ரஜினி ஐந்து ரூபாய் டாக்டராக நடிப்பதாக வெளியான செய்திகளை மறுத்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, இது ஒரு திரில்லர் கதையில் உருவாக இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் தர்மன் படம் ‛தி குட் டாக்டர்' என்ற ஹாலிவுட் தொடரின் ரீமேக் என்று சோசியல் மீடியாவில் ஒரு செய்தியை வைரலாகி வருகிறது. இதுகுறித்து அஸ்வத் மாரிமுத்து இடத்திலும் சில ரசிகர்கள் கேள்வி கேட்ட நிலையில், அதை அவர் மறுத்துள்ளார். இது பொய்யான செய்தி என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !