இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரம் : பாக்யஸ்ரீ போர்ஸ்
தாய் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படம் சேயோன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்து வருகிறார் . இவர் ஏற்கனவே துல்கர் சல்மான் நடித்து வெளியான காந்தா படத்தில் தமிழில் அறிமுகமானார்.
இந்நிலையில் தெலுங்கில் அகில் அக்கினேனிக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ நடித்துள்ள லெனின் படம் ஜூலை 10ம் தேதி திரைக்கு வருகிறது. தான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து பாக்யஸ்ரீ போர்ஸ் கூறுகையில், ‛‛பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம். எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. ரசிகர்களின் மனதில் இந்த பாரதி கதாபாத்திரம் நீங்காத இடம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இப்படி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்காக இயக்குனர் முரளி கிஷோருக்கு நன்றி. ஜூலை 10ம் தேதி முதல் பாரதி ஒவ்வொருவரின் இதயத்திலும் வாழ்வாள் என்று 100 சதவீதம் நம்புகிறேன்'' என தெரிவித்திருக்கிறார்.