உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அவதூறு பரப்புவதாக ஸ்வேதா மேனன் மீது திரிஷ்யம் நடிகை போலீசில் புகார்

அவதூறு பரப்புவதாக ஸ்வேதா மேனன் மீது திரிஷ்யம் நடிகை போலீசில் புகார்

மலையாள திரையுலகில் கடந்த வருடம் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்று நடிகை ஸ்வேதா மேனன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் முடிந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் தற்போது ஸ்வேதா மேனன் உள்ளிட்ட நிர்வாகிகள் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திரிஷ்யம் படத்தில் மோகன்லால் மகளாக நடித்தவரும், நடிகர் சங்கத்தின் இணைச் செயலாளருமான அன்சிபா ஹாசன் நடிகர் சங்கத்தில் இருந்து விலகியதுடன், நிர்வாக பொறுப்பில் இருக்கும் சிலர் மீது குற்றம் சாட்டி காவல் துறையிலும் புகார் அளித்தார். தற்போது ஸ்வேதா மேனன் பதவி விலகி உள்ள நிலையில், அவர் மீதும் கொச்சி பாலரிவட்டம் காவல் நிலையத்தில் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார் அன்சிபா ஹாசன்.

இந்த புகாரில், தலைவர் ஸ்வேதா மேனன் மற்றும் துணைத் தலைவர் லட்சுமி பிரியா ஆகியோர் சமூக வலைத்தளங்கள் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சதி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார் அன்சிபா. குறிப்பாக ஸ்வேதா மேனன், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு சமூக வலைதள மக்கள் தொடர்பு நிறுவனத்துடன் சட்டவிரோத ஒப்பந்தம் செய்துகொண்டு, தான் அமைப்பில் இருந்து விலகிய பிறகு தனக்கு எதிரான தகவல்களை பரப்பினார் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !