வேறு ஹீரோ நடித்து இருக்கலாம் என்றார்கள்: 'அங்கீகாரம்' ஹீரோ ஓபன் டாக்
சென்னையில் நடந்த 'அங்கீகாரம்' பட நிகழ்ச்சியில் இயக்குனர் தென்பாதியான் பேசியது: முதலில் இந்தக் கதையை முதலில் கேஜேஆர் ஸ்டுடியோவிடம் கொண்டு சென்றேன். அப்போது வேறு ஒரு பெரிய ஹீரோவிடம் இந்தக் கதையைச் சொன்னோம். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் வேறு ஒரு கதை செய்யச் சென்றுவிட்டேன்.
பிறகு, இந்தக் கதையை நம்மைத் தவிர வேறு யாராலும் சரியாக செய்ய முடியாது என்று தோன்றியதால், மீண்டும் இந்தக் கதையை கையில் எடுத்தேன். அப்போது தயாரிப்பாளர் கேஜிஆர், 'இந்தப் படத்தில் நானே நடிக்கிறேன்' என்று கூறினார். அதன்பிறகு அவரை வைத்து இந்தப் படத்தை மீண்டும் தொடங்கினோம். இந்தக் கதைக்காக அவர் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்தார். என் ஹீரோ எந்த விதத்திலும் தவறாகத் தெரியக்கூடாது என்பதற்காக நானும், என் குழுவினரும் மிகவும் கடினமாக உழைத்தோம். அது படத்தில் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது.''என்றார்.
ஹீரோ கேஜேஆர் பேசியது: இந்தப்படம் பெரிய வெற்றி இல்லை மீடியம் தான். எனக்கு தெரிந்தவர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என் காதுபடவே வேறு கதை எடுத்திருக்கலாம், வேறு ஹீரோ நடித்திருக்கலாம் என்றார்கள். ஆனால் இப்போது மக்கள் வரவேற்பு தர ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு முழு காரணம் என இயக்குனர் தென்பாதியான் தான். அவர் சொன்னதை நான் செய்தேன். நான் தயாரித்த படங்களில் நடித்தவர்கள், என் நண்பர்கள் என யாரும் எனக்கு சப்போர்ட் பண்ணவில்லை. ஆனாலும், இன்னும் 10 ஆண்டில் நான் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகனாக ஜெயிப்பேன்''' என்றார்.