உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்சிக் : பெண்களை மையப்படுத்தி ‛லேடீஸ் அண்ட் லேடீஸ்' டீசர் வெளியீடு

டாக்சிக் : பெண்களை மையப்படுத்தி ‛லேடீஸ் அண்ட் லேடீஸ்' டீசர் வெளியீடு

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கேஜிஎப் புகழ் யஷ் நடித்துள்ள படம் ‛டாக்சிக்'. நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுடாரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு அதிரடி ஆக் ஷன் படமாக தயாராகி உள்ளது. பான் இந்தியா மொழிகளில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் தனியாக வெளியிடுகின்றனர். ஏற்கனவே ஓரிரு முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு இப்போது ஆக., 28ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.

படத்தின் அறிமுக டீசர் வெளியான போது அதில் இடம் பெற்ற ஆபாச காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின. தொடர்ந்து பாடல், டீசர் வெளியானது. டீசரில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்றன. இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள நாயகிகளை பிரதானப்படுத்தி லேடீஸ் அண்ட் லேடீஸ் என்ற பெயரில் ஒரு முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

நயன்தாரா, கியாரா, ருக்மணி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சக்திவாய்ந்த தோற்றங்களில் மிரட்ட, யஷ் அதிரடியில் இறங்கி உள்ளார். தற்போது இந்த முன்னோட்ட வீடியோ வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !