'கருப்பு' பட வசூல் 300 கோடி; சூர்யா சம்பளம் 100 கோடி
கடந்த பல ஆண்டுகளாக சூர்யாவுக்கு சினிமாவில் வெற்றி கிடைக்கவில்லை. 'சிங்கம் 2'வுக்குபின் அவரால் கமர்ஷியல் வெற்றி கொடுக்க முடியவில்லை. இந்நிலையில், சமீபத்தில் அவர் நடித்த 'கருப்பு' படம், கடவுள் அருளால் 300 கோடியை தாண்டியுள்ளது. சூர்யாவும், அவர் குடும்பமும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அடுத்த மாதம் அவர் நடித்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' வர உள்ளது. அடுத்து சில படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் கருப்பு பட வெற்றியால் அவர் சம்பளம் 100 கோடியை தொட்டுள்ளதாக தகவல் கசிகின்றன. அவருக்கு தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளத்திலும் நல்ல பிஸினஸ் இருப்பதால் இந்த தொகை. தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்டோர் மட்டுமே 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். சிவகார்த்திகேயன் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை. தனுசும் அப்படியே. இந்த சூழ்நிலையில் கருப்பு பட வெற்றியால் சூர்யா மார்க்கெட் உயர்ந்துள்ளது, சம்பளமும் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. ஆனாலும், இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக யாரும் சொல்லவில்லை.