இதயம் முரளி : வழக்கு இருந்தாலும், முன்பதிவு ஆரம்பம்
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் மற்றும் பலர் நடிப்பில் இந்த வருடப் பொங்கலுக்கு வெளியான படம் 'பராசக்தி'.
அப்படத்திற்காக தனக்குச் சேர வேண்டிய சம்பள பாக்கித் தொகையான 8.39 கோடி ரூபாயைத் தர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் இயக்குனர் சுதா கொங்கரா. மேலும் சம்பள பாக்கி வரும் வரையில் ஜூலை 10ம் தேதி அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவர உள்ள 'இதயம் முரளி' படத்திற்கும் தடை கோரி இருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி குமாரரேஷ் பாபு, இருதரப்பு வாதங்களையும் கேட்டார். எதிர்தரப்பு தனது எழுத்துபூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய ஜூலை 8 வரை, அதாவது இன்று வரை அவகாசம் வழங்கினார்.
இந்நிலையில் 'இதயம் முரளி' படத்திற்கான முன்பதிவு ஆன்லைன் இணையதங்களில் ஆரம்பமாகி உள்ளது. வழக்கு ஒரு பக்கம் தொடுக்கப்பட்டிருந்தாலும் படக்குழு படத்தின் புரமோஷன் நிகழ்வுகளை நிறுத்தாமல் நடத்தி வருகிறது.