முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் உடன் மோதும் சென்னை லவ் ஸ்டோரி
தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், வருகிற ஜூலை 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை, என்றாலும் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் ஜூலை 24ல் ஜனநாயகன் ரிலீஸ் என்று இந்த தேதியை உறுதிப்படுத்தி போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். இதனால் விஜய்யின் திரைப்படம் அந்த நாளில் பாக்ஸ் ஆபீஸில் ஆதிக்கம் செலுத்துவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் தெலுங்கில் ரொமான்டிக் டிராமாவாக தயாராகியுள்ள சென்னை லவ் ஸ்டோரி என்ற படமும் இதே ஜூலை 24ல் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரவி நம்புரி இயக்கியுள்ள இந்த படத்தில் கிரண் அப்பாவரம் - ஸ்ரீ கவுரி பிரியா ஜோடி சேர்த்துள்ளனர். சாய் ராஜேஷ் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ்கேஎன் தயாரித்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்ட ஒரு ஜனநாயகன் வெளியாகும் அதே நாளில் வெளியாவதால், சென்னை லவ் ஸ்டோரி படத்திற்கு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பது சவாலாக இருக்கலாம். மேலும், ஜனநாயகன், விஜய்யின் கடைசி படம் என்பதால், தெலுங்கு மாநிலங்களிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய பிரம்மாண்ட படத்திற்கு மத்தியில் சென்னை லவ் ஸ்டோரி எவ்வாறு சோபிக்கப் போகிறது என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.