உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நெட்பிளிக்ஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த ‛பிளாஸ்ட்'

நெட்பிளிக்ஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த ‛பிளாஸ்ட்'

கடந்த மே 28ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பிளாஸ்ட். அர்ஜுன், பிரீத்தி முகுந்தன், அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த ஆக்ஷன் டிராமா படத்தை, அறிமுக இயக்குனர் சுபாஷ் கே.ராஜ் இயக்கியுள்ளார்.

திரையரங்குகளில் உலகளவில் 75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த பிளாஸ்ட் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிரம்மாண்ட மைல்கல்லை எட்டியுள்ளது. ஜூன் 25ல் ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் உலகளாவிய டாப்-10 ஆங்கிலம் அல்லாத திரைப்படங்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளின் டாப் 10 ட்ரெண்டிங் பட்டியலிலும் இப்படம் முதலிடம் பிடித்து, உலகளாவிய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை நிரூபித்துள்ளது.

இப்படத்தில் விவேக் பிரசன்னா, ஜான் கொக்கன், அர்ஜூன் சிதம்பரம், பவன் மற்றும் திலீபன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். திரையரங்குகளைத் தொடர்ந்து, தற்போது ஓடிடி தளத்திலும் பிளாஸ்ட் படம் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.

இப்படத்தின் இந்த பிரமாண்டமான வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இயக்குனர் சுபாஷ் கே. ராஜ் கூட்டணி, பிளாஸ்ட் படத்தின் அடுத்த பாகத்திற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !