உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரைப்பட தயாரிப்பாளர் மகனை மணக்கும் துரைமுருகன் பேத்தி

திரைப்பட தயாரிப்பாளர் மகனை மணக்கும் துரைமுருகன் பேத்தி

முன்னாள் அமைச்சர் துரை முருகன் பேத்தியும், திமுக., எம்பி கதிர் ஆனந்த்தின் மகள் செந்தாமரைக்கும், திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. வேலூர், காட்பாடியில் உள்ள துரை முருகனின் கிங்ஸ்டன் கல்லூரியில் வெகு விமர்சையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

விழாவில் திமுக., எம்.பி.க்கள் கனி மொழி, தமிழச்சி தங்கபாண்டியன், திமுக., பிரமுகர்கள் நேரு, எம்ஆர்கே பன்னீர் செல்வம், ஜெகத்ரட்சகன், ஐஜேகே., கட்சியின் பச்ச முத்து, மற்றும் திரைத்துறையை சேர்ந்த ஆர்கே செல்வமணி, தீனா, ஐஸ்வர்யா ரஜினி, அம்மா டி சிவா, சுப்பு பஞ்சு, ஜெய், சித்து, சாந்தனு, கீர்த்தி, சுசீந்திரன், 5 ஸ்டார் கதிரேசன், கலா மாஸ்டர், போஸ் வெங்கட், ஜெயப்பிரகாஷ், வேல ராமமூர்த்தி, ஆர்வி உதயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

மணமக்களுக்கு தங்கம் மற்றும் வைரத்திலான அணிகலன்களை இருவீட்டாரும் பரிசாக வழங்கினர். லக்ஷ்மன் ஸ்ருதி குழுவினரின் இசை கச்சேரி நடைபெற்றது. மாதம்பட்டி ரங்கராஜின் சித்தப்பா நாகராஜின் சைவ உணவு வழங்கப்பட்டது. நவம்பர் முதல் வாரத்தில் சென்னை ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !