கார்த்திக் சுப்பராஜ் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
ADDED : 12 hours ago
தமிழில் 'பீட்சா, ஜிகிர் தண்டா, பேட்ட, ஜகமே தந்திரம், ரெட்ரோ' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது சில புதுமுகங்களை வைத்து குறுகிய கால கட்டத்தில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் ஒரு புதிய ஆக்சன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் தொடங்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக அதர்வா நடிக்கின்றார். வில்லன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் உப்பேந்திரா நடிக்கின்றார். மேலும், இவர்களுடன் இணைந்து நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா நடிக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கின்றது.