சூர்யா 49வது படத்தின் புதிய அப்டேட்!
ADDED : 15 hours ago
இயக்குனர் அ.வினோத் 'ஜனநாயகன்' படத்தை இயக்கிய பிறகு இன்னும் அவரின் அடுத்த படத்தை குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையில் வினோத் புதிதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
'ஜனநாயகன்' படத்திற்கு முன்பு தனுஷூடன் இணைந்து வினோத் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. தற்போது வினோத், தனுஷ் கூட்டணி படம் ஒரு சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது.
சமீபகாலமாக வினோத் நடிகர் சூர்யாவிற்காக கதை எழுதும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இப்போது நிலவரப்படி வினோத் நடிகர் சூர்யாவின் 49வது படத்தை இயக்குவது உறுதியாகியுள்ளது. கூடுதலாக கருப்பு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.