உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே கணிப்புகளை பொய்யாக்கிய மம்முட்டி

பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே கணிப்புகளை பொய்யாக்கிய மம்முட்டி

மலையாள சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதுதான் தமிழில் 'மவுனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மம்முட்டி. கேசி பிலிம்ஸ் சார்பில் கோவை செழியன் தயாரித்தார். மலையாள இயக்குனர் மது தமிழில் 'மவுனம் சம்மதம்' என்ற தலைப்பில் இயக்கினார்.

மம்முட்டி, அமலா, சரத்குமார், ஜெய்சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன், நாகேஷ், ஜெய் கணேஷ், சார்லி, குமரிமுத்து, பீலிசிவம், ஆர்.எஸ்.சிவாஜி, என்னத்த கன்னய்யா, ஸ்ரீஜா, ஒய்.விஜயா, சுகுமாரி உள்ளிட்ட பலர் நடித்தனர்.

நிறைய கோர்ட் காட்சிகள், பக்கம் பக்கமாக வசனங்கள் இருந்தன. இந்த படத்தில் கமல்ஹாசன், அல்லது சிவகுமார் இருவரில் ஒருவரைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் முடிவு செய்தார். ஆனால் இயக்குனர் மது, மம்முட்டி நடித்தால்தான் இயக்குவேன் என்று கூறிவிட்டார்.

அத்தனை கணிப்புகளையும் பொய்யாக்கி நீதிமன்ற காட்சிகளில் அழகான தமிழ் பேசி அசர வைத்தார் மம்முட்டி. பொதுவாகவே மம்முட்டி எந்த மொழி படத்தில் நடித்தாலும் சொந்த குரலிலேயே பேசி நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !