உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முன்பதிவில் முன்னேறிச் செல்லும் 'ஜனநாயகன்'

முன்பதிவில் முன்னேறிச் செல்லும் 'ஜனநாயகன்'

வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் நாளை மறுதினம் ஜூலை 23ம் தேதியன்று வெளியாக உள்ளது.

இப்படத்திற்கான முன்பதிவு தமிழகத்தில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என கடந்த ஆறு மாதங்களாக அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய படம் தணிக்கை சான்றிதழ் காரணமாக இப்போதுதான் வெளியாகிறது.

விஜய் நடித்து கடைசியாக 2024ல் 'தி கோட்' படம் வெளிவந்தது. அந்தப் படம் எதிர்பார்த்த வசூலையும் வரவேற்பையும் பெறவில்லை. அதனால், மீண்டும் ஒரு வசூலை 'ஜனநாயகன்' பெற வேண்டும். அதுவும் விஜய் முதல்வர் ஆன பின்பு வெளியாகும் படம் என்பதால் பெரிய வெற்றி பெற வைக்க வேண்டும் என அவரது கட்சியினரும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே இணையங்களில் திருட்டுத்தனமாக படம் லீக் ஆனாலும் ரசிகர்கள் முன்பதிவில் ஆர்வம் காட்டி வருவதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆன்லைன் முன்பதிவு இணையதளம் ஒன்றில் தற்போது வரையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த வார இறுதி வரையில் முன்பதிவு சீக்கிரம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !