உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026 தேர்தலில் வேட்பாளர்களை கண்டறிய பணம் வாங்கினேனா? : ஸ்வேதா மேனன் பதில்

2026 தேர்தலில் வேட்பாளர்களை கண்டறிய பணம் வாங்கினேனா? : ஸ்வேதா மேனன் பதில்

மலையாள திரையுலக நடிகர் சங்கத்திற்கு கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்வேதா மேனன். ஆனால் இரண்டு மாதங்களாக நடிகர் சங்கத்தில் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தவர், பின்னர் மீண்டும் மனதை மாற்றிக் கொண்டு தானே பதவியில் தொடர்வதாக கூறினார். மேலும் தன்னை நடிகர் சங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த பல வழிகளில் முயற்சி நடப்பதாகவும் கூறிய அவர், 2026 தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர்களை கண்டறிவதற்காக இரண்டு கோடி ரூபாய் வாங்கியதாக நடிகை மாலா, பார்வதி உள்ளிட்ட சில நடிகைகள் பத்திரிகையாளர் சந்திப்பில் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்தும் பதில் அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, கடந்த 12 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து வரும் ஒரு தேசிய கட்சி கேரளாவில் வேட்பாளர்களை கண்டுபிடிக்க எனக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ? இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா ? நான் எந்த கட்சியையும் சேர்ந்தவராக இருந்தால் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. நடிகர் சங்கத்தில் அனைத்து தரப்பு கட்சியினரும் இருக்கிறார்கள். சினிமா கலைஞர்களை ஜாதி மத அரசியலுக்குள் கொண்டு வந்து அமைப்பை பிரிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று பதில் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !