உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதுச்சேரியில் 13 தியேட்டர்களில் ஜனநாயகன் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது ஏன் ?

புதுச்சேரியில் 13 தியேட்டர்களில் ஜனநாயகன் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது ஏன் ?

நடிகர் விஜய் அரசியலில் இறங்கி தனிக்கட்சி துவங்கி தற்போது தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ளார். அதற்கு முன்னதாக அவரது நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் பல தடைகளைக் கடந்து நேற்று வெளியானது. இந்த படம் சில மாதங்களுக்கு முன்பு இணையதளத்தில் லீக் ஆனாலும் கூட ரசிகர்கள் வழக்கம் போல முதல் நாள் இந்தப் பார்ப்பதற்கு தியேட்டர்களில் ஆர்வமாக குவிந்தார்கள். அதேசமயம் புதுச்சேரியில் உள்ள 13 திரையரங்குகளில் நேற்று காலை திரையிட திட்டமிடப்பட்டிருந்த சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் வெளியே காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

முறையான டிக்கெட் விநியோகம் மற்றும் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்களால் இந்த காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. ரசிகர் மன்றங்கள் அதிக எண்ணிக்கையில் டிக்கெட் கேட்டதால் பொதுமக்களுக்கு டிக்கெட் வழங்குவதில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தெளிவான தீர்வு எட்டப்படாததால் சிறப்பு காட்சிகளை முழுமையாக ரத்து செய்வதே சரியாக இருக்கும் என்று ஒருமனதாக திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு எடுத்ததால் தான் இந்த 13 திரையரங்குகளில் காலைக் காட்சிகள் திரையிடப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !