அழுது வீடியோ வெளியிட்ட ஆனந்தி : 'ஜனநாயகன்' தந்த ஏமாற்றம்
ஒரு படத்தைப் பார்த்து அமைச்சர்கள் ஒரு பக்கம் அழ, இப்படியும் ஒரு படமா என தமிழ் ரசிகர்கள் அழ, எங்களது நல்ல படம் ஒன்றை ரீமேக் என்ற பெயரில் இப்படி செய்துவிட்டீர்களே என தெலுங்கு ரசிகர்கள் அழ, தான் நடித்த காட்சி ஒன்று கூட இல்லையே என படத்தில் நடித்தவர் அழுது கவலையுடன் பதிவிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.
டிவி நடிகையான ஆனந்தி, அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'கட்டா குஸ்தி 2' படத்திலும் நடித்துள்ளார். 'ஜனநாயகன்' படத்தில் அவர் நடித்த காட்சிகள் இடம் பெறவில்லை என்பது குறித்து வருத்தத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
“நான் வந்து நிறைய படங்கள் நடிக்கிறேன். ஆனா, நிறைய எடிட்ல போயிடுது. அதுக்காக நான் வருத்தப்பட்டதில்ல. ஆனா, ஜனநயாகன்ல நான் நடிச்ச சீன்ஸ் எடிட் ஆனது ரொம்ப வருத்தமா இருக்கு.
நான் திரும்ப நடிக்க வந்த போது இதுதான் முதல்ல கமிட் ஆன படம். ஒரு வருஷம், ஒன்றரை வருஷம் இந்த படத்தோட ரிலீஸுக்காகக் காத்திருந்தேன். அதுவும் சார் கூட காம்பினேஷன்.
நான் படத்துல நடிக்க வந்ததுக்குக் காரணமே சார் கூட நடிக்கணும்கறதுதான். அதுதான் என் டிரீமா இருந்தது. எல்லாரும் வந்து பாருங்க, படம் சூப்பரா இருக்கு. பெண்கள் அதிகாரம் பெறுவது பற்றிய படம் வேற.
அடுத்து அவர் படம் நடிச்சார்னா நாம டிரை பண்ணி நடிக்கலாம். ஆனா, இது அவருடைய கடைசி படம். ரொம்ப ஹாப்பியா தியேட்டருக்குப் போனேன். நம்ம சீன் வரும், தளபதி காம்பினேஷன்ல இருக்கும்னு, எடிட் ஆகும்னு எதிர்பார்க்கல, பீல் ஸோ அன்லக்கி, இட்ஸ் ஓகே” என மிகவும் வருத்தத்துடன் வீடியோவில் பேசியிருக்கிறார்.