எது அழகு... : அழகாய் விளக்கும் ராஷ்மிகா மந்தனா
ADDED : 8 hours ago
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. ஹிந்தி படங்களிலும் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்தவர் தொடர்ந்து படங்களிலும் நடிக்கிறார். அழகு பற்றி எழுந்த கேள்விக்கு ராஷ்மிகா அளித்த பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அவர் கூறியதாவது, ‛‛உள்ளம் அழகானால் உடலும் அழகாகும். விதவிதமான ஆடைகள், அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினாலும் ஆழ்மனது தூய்மையாக இருந்தால் மட்டுமே நாம் அழகாக தெரிவோம். முடிந்தவரை நல்லது செய்து வாழ்வோம். அதுதான் நம் காலத்திற்கு பிறகும் நம்மை பேச வைக்கும்'' என்கிறார்.