ஆகஸ்ட்டில் வரிசை கட்டும் படங்கள்….
2026ம் ஆண்டின் 7வது மாதமான ஜூலை மாதம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த ஏழு மாதங்களில் தமிழில் சுமார் 130 படங்கள் வரை வெளிவந்துள்ளன. இந்த மாதத்தில் முதல் மூன்று வெள்ளிக் கிழமைகளில் மொத்தமாக 12 படங்களும், கடைசி இரண்டு வெள்ளிக்கிழமைகளில் வெறும் 2 படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன.
அடுத்த மாதம் ஆகஸ்ட்டில் சில முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. அதற்கான அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. ஆகஸ்ட் 7ல் 'டிசி, ஜிடிஎன், போட்டோகிராபர்' ஆகிய படங்களும், ஆகஸ்ட் 14ம் தேதி, “ஹாய், மகுடம், விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆகிய படங்களும் தியேட்டர்களில் வெளியாக உள்ளன.
ஆகஸ்ட் 21ம் தேதி ‛மொத ராத்திரி' படம் தியேட்டரிலும், 'பியார் பிரேமா கல்யாணம்' படம் ஓடிடி தளத்தில் நேரடியாகவும் வெளியாக உள்ளது.
ஆகஸ்ட் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளுக்கான பிற படங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதால் அதற்குள்ளாக படங்களின் அறிவிப்புகள் வரலாம்.