உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 16 மாத இடைவெளிக்குப் பிறகு அஜித் பட அறிவிப்பு

16 மாத இடைவெளிக்குப் பிறகு அஜித் பட அறிவிப்பு

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் அஜித். விஜய் தீவிர அரசியலில் இறங்கியதற்குப் பிறகு அஜித்திற்கு உண்டான போட்டி இல்லாமல் போய்விட்டது.

ரஜினிகாந்த் - கமல்ஹாசன், விஜய் - அஜித் என்றுதான் சினிமாவில் போட்டி இருந்து வந்தது. மற்ற நடிகர்கள் இந்த நால்வருக்குப் பிறகுதான் இருக்கிறார்கள். விஜய் அரசியலில் இறங்கியதால் 'ஜனநாயகன்' படத்தைத்தான் தனது கடைசி படம் என அறிவித்துவிட்டார். அந்தப் படமும் வெளியாகி தியேட்டரை விட்டுப் போகும் நிலைக்கு வந்துவிட்டது. இனி விஜய் உடனான போட்டி அஜித்துக்கு இல்லை என்பதாகிவிட்டது.

அஜித் நடித்து கடைசியாக 'குட் பேட் அக்லி' படம் வெளிவந்து 16 மாதங்கள் ஆகிறது. இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று அவருடைய 64வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அஜித்தின் மனைவி ஷாலினி இந்தப் படத்தின் தயாரிப்பாளர்.

அஜித் கேட்ட சம்பளத்தை முன்னணி நிறுவனங்கள் தரத் தயங்கியதால் அஜித் தரப்பிலேயே படத்தைத் தயாரிக்க முடிவு செய்துவிட்டார்கள். மீண்டும் ஒரு ஆங்கிலத் தலைப்புடன் 'டேர் டெவில்' என களமிறங்கி இருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்

அடுத்த வருட கோடை விடுமுறையில் படம் வந்துவிடுமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !