உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸின் பௌசி உடன் மோத தயாராகும் இரண்டு ஹிந்தி படங்கள்

பிரபாஸின் பௌசி உடன் மோத தயாராகும் இரண்டு ஹிந்தி படங்கள்

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ரொமாண்டிக் வார் ஆக்ஷன் படமான பௌசி வருகிற டிசம்பர் 3ல் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. இதே தேதியில் ஹிந்தியில் இரண்டு மெகா படங்கள் வெளியாகி பிரபாஸ் படத்துக்கு கடும் போட்டியை கொடுக்க தயாராகி வருகின்றன.

சமீபத்திய தகவல்களின்படி, ரோஹித் ஷெட்டி மற்றும் அஜய் தேவ்கனின் மெகா கூட்டணியில் உருவாகி வரும் கோல்மால் 5 என்ற படம் டிசம்பர் 4ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதுதவிர, அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத படமும் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது. இந்த மூன்று படங்களும் வெவ்வேறான ரசிகர்களைக் கவர்ந்தாலும், ஹிந்தி திரையரங்குகள் மற்றும் வசூலில் கடும் போட்டியை எதிர்கொள்ளும்.

ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள பௌசி படத்தில் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், அனுபவ் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பானு சந்தர், ஜெயபிரதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் பல இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !