விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து மூன்று படங்கள் ரிலீஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. அவர் நடித்து கடந்த வருடம் வெளியான 'தலைவன் தலைவி' படம் 100 கோடி வசூலைக் கடந்தது. அதற்கடுத்து இந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'காந்தி டாக்ஸ்' படம் வரவேற்பைப் பெறாமல் தோல்வியைத் தழுவியது.
விஜய் சேதுபதி தற்போது 3 படங்களில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார். “டிரைன், ஸ்லம்டாக் 33 - டெம்பிள் ரோடு, பத்தா” ஆகிய படங்கள் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
இவற்றில் 'பத்தா' படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் என நேற்று அறிவித்துவிட்டார்கள். 'டிரைன்' படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது. 'டிரைன்' படம் எப்படியும் அடுத்த மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.
'ஸ்லம்டாக் 33 - டெம்பிள் ரோடு' படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. விஜய் சேதுபதி நடித்த இந்த மூன்று படங்கள் இப்படி அடுத்தடுத்து வரிசையாக வருவது சரியாக இருக்காது. ஆனால், என்ன செய்யப் போகிறார்கள் என்பது இனிமேல்தான் தெரிய வரும்.