உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அருண் விஜய் - முத்தையா கூட்டணியில் உருவாகும் 'இருளன்'

அருண் விஜய் - முத்தையா கூட்டணியில் உருவாகும் 'இருளன்'


கிராமத்து பின்னணியில் கமர்சியல் அம்சங்களுடன் 'கொம்பன், மருது, விருமன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் முத்தையா. 'விருமன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இவரது இயக்கத்தில் வெளியான 'காதர்பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்' மற்றும் 'ராம்போ' ஆகிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து தனது மகனை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார் முத்தையா.

இந்த நிலையில் தற்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து 'இருளன்' என்கிற புதிய படத்தை இயக்குகிறார். இவர்கள் இருவரும் முதன்முறையாக இணையும் படம் இது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தை சண்முகவேல் பாண்டியன் தயாரிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படத்தின் டைட்டில் போஸ்டருடன் தற்போது வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !