உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிறிஸ்டோபர் நோலன் படம்.... ஒரு நாள் நிஜமாகும் : சாய் அபயங்கர்

கிறிஸ்டோபர் நோலன் படம்.... ஒரு நாள் நிஜமாகும் : சாய் அபயங்கர்

தமிழ் சினிமாவில் இளம் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அபயங்கர். தனுஷின் ஓம், ராகவா லாரன்ஸின் பென்ஸ், சிம்புவின் 49வது படம், அட்லி, அல்லு அர்ஜூனின் ராக்கா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்கள் அவர் கைவசம் உள்ளன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது....

‛‛21 வயதில் நான் பல விஷயங்களை சாதித்ததாக சொல்கிறார்கள். இது எல்லாமே கடவுளின் அருளால் சாத்தியமானது. என் பயணம் இப்போது தான் துவங்கி உள்ளது. இன்னும் நான் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. மக்களுக்கு நல்ல இசையை கொடுக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டுமே இப்போது என்னிடம் உள்ளது. கிறிஸ்டோபர் நோலனுடன் இணைந்து பணியாற்ற ஆசை, ஒருநாள் அது நிஜமாகும். எனது அடுத்த தனியிசை ஆல்பமான ‛ரதிமா' ஆக., 21ல் வெளியாகும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !