உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் கூட தொட முடியலையே : ராஷ்மிகா வருத்தம்

கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் கூட தொட முடியலையே : ராஷ்மிகா வருத்தம்

நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் மைசா மற்றும் ரணபாலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் மைசா படப்பிடிப்பின் போது அவருக்கு இடுப்புப் பகுதியில் உள் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக சிகிச்சை பெற்றுக்கொண்டு, தற்போது தனது வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வருகிறார். இந்த காயத்தில் இருந்து முழுமையாகக் குணமடையும் வரை உணவு மற்றும் உடல் எடை கட்டுப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளைத் தொடக்கூடாது என அவர்கள் வலியுறுத்தியதால் அவற்றைத் தவிர்த்து வருகிறார் ராஷ்மிகா.

அதேசமயம், இனிப்பு வகைகளை உண்ண முடியவில்லை என்கிற வருத்தத்தை நகைச்சுவையாகத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, நீச்சல் குளத்தில் உள்ள ஒரு பந்தை நாய் ஒன்று தொடர்ந்து பிடிக்க முயல்கிறது; அது பலமுறை முயன்றும் அதனால் பிடிக்க முடியவில்லை. இந்த வீடியோவை பதிவிட்டு, ஒவ்வொரு நாளும் என் கண் முன்னால் இனிப்பு மற்றும் சுவையான பதார்த்தங்களைச் சுற்றிப் பார்க்கும்போது இதுதான் எனக்கும் நடக்கிறது என்று தனக்கு விருப்பமான உணவு கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் அதைத் தொட முடியாத தனது இயலாமையை நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !