உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 94 வயதான சவுகார் ஜானகிக்கு செயற்கை சுவாசம் : அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது?

94 வயதான சவுகார் ஜானகிக்கு செயற்கை சுவாசம் : அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது?

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி வயோதிகம் மற்றும் கிட்னி பிரச்னையால் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவர் தரப்பில் விசாரித்தால் பல ஆண்டுகள் பெங்களூரில் வசித்து வந்த சவுகார் ஜானகி சமீபகாலமாக சென்னையில் அவர் மகள் கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு கிட்னி பிரச்னை ஏற்பட அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வயோதிகம் மற்றும் வேறு சில பிரச்னைகள் வர சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்பொழுது அவருக்கு சிகிச்சை, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மகள் கவனித்து வருகிறார். அமெரிக்காவில் இருந்து அவரது மகன் வந்துள்ளார். அதை தொடர்ந்து அவருக்கான அடுத்தக்கட்ட சிகிச்சை குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர் மற்றும் சில அமைச்சர்களும் சவுகார் ஜானகி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை வந்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர். அவர் 94 வயதை தொட்டுள்ளதால் அவரது உடல்நலத்திற்கு தகுந்தபடி மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !