உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாட்ரிக் வெற்றியில் ஜிவி - வெங்கி கூட்டணி

ஹாட்ரிக் வெற்றியில் ஜிவி - வெங்கி கூட்டணி


தமிழ் சினிமாவில் உள்ள கலைஞர்கள் மற்ற மொழிகளிலும் வெற்றிகரமாக பணியாற்றி வருகிறார்கள். தமிழ் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடன இயக்குனர்கள் என பலரை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இசையமைப்பாளர்களைப் பொறுத்தவரையில் ஜிவி பிரகாஷ்குமார் தெலுங்கில் அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி, தமிழ் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ்குமார் இருவரும் முதன் முதலில் இணைந்து 'வாத்தி' படத்தில் பணியாற்றினார்கள். அப்படம் 100 கோடி வசூலைக் கடந்தது. அது மட்டுமல்ல அப்படத்தில் இடம் பெற்ற பாடல்களுக்காக ஜிவி பிரகாஷூக்குத் தேசிய விருதையும் இப்படம் பெற்றுத் தந்தது.

அதற்கடுத்து இருவரும் இணைந்த 'லக்கி பாஸ்கர்' படமும் 100 கோடி வசூலைக் கடந்து வெற்றி பெற்றது. மூன்றாவதாக கடந்த வாரம் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் மூலம் இக்கூட்டணி இணைந்தது. இப்படம் தற்போது 150 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !