உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஒரே படத்தில் நடித்த லியாகத் அலிகான்

பிளாஷ்பேக் : ஒரே படத்தில் நடித்த லியாகத் அலிகான்

விஜயகாந்தின் மிக நெருக்கமான நண்பராக இருந்தவர் லியாகத் அலிகான். விஜயகாந்தின் பெரும்பாலான படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர். பூந்தோட்ட காவல்காரன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், மக்கள் ஆட்சி, டெல்லி டைரி, உளவுத்துறை, வாஞ்சிநாதன் உள்ளிட்ட பல படங்களுக்கு எழுதினார். அதோடு பாட்டுக்கு ஒரு தலைவன், ஏழை ஜாதி, கட்டளை, எங்க முதலாளி உள்ளிட்ட சில படங்களை இயக்கவும் செய்தார்.

நடிப்பு ஆசை யாரைத்தான் விட்டது. இவரும் 'ஏரிக்கறை பூங்காற்றே' என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தில் பல்லவி, தேவி பிரியா, ராஜீவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள், எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். ஜெயசுந்தர் இயக்கி இருந்தார். ஊருக்கு நல்லவரான லியாகத் அலிகான், பிரிந்து வாழும் ராஜீவையும், அவரது மனைவி பல்லவியையும் சேர்த்து வைப்பதுதான் கதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

S Ramkumar, Tiruvarur
2026-08-21 15:54:32

இவர் அந்த லியாகத் அலி கான் இல்லை. அதிமுக முக்கிய புள்ளி.