என் வாழ்வின் மிகப்பெரிய தூண் அம்மா தான் : ஜேசன் சஞ்சய்
ADDED : 4 hours ago
முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்கி உள்ள படம் ‛சிக்மா'. சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஆக் ஷன் கதையில் இப்படம் உருவாகி உள்ளது. கடந்த ஜூலை மாதமே படம் வெளியாக வேண்டியது. ஜனநாயகன் ரிலீஸ் உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போனது. இப்போது அக்., 2ல் படம் வெளியாகிறது.
படத்தின் புரொமோஷன் பணிகளில் ஜேசன் ஈடுபட்டுள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛என் வாழ்வில் மிகப்பெரிய தூணே என் அம்மா தான். 24 மணிநேரமும் என்னைப் பற்றியும், என் தங்கை பற்றியும் சிந்தித்துக் கொண்டே இருப்பார். ஒருநாள் அவருக்கு போன் செய்ய மறந்துவிட்டால் கூட அவர் போன் செய்துவிடுவார். என் அப்பா, அம்மாவிடம் எல்லா விஷயங்களையும் என்னால் பகிர்ந்து கொள்ள முடியாது. ஒருவித தயக்கம் இருக்கும். என் தங்கையிடம் தான் மனம் திறந்து பேசுவேன்'' என்றார்.