உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே ஆண்டில் இரண்டு 200 கோடிப் படங்களில் சூர்யா

ஒரே ஆண்டில் இரண்டு 200 கோடிப் படங்களில் சூர்யா

2026ம் ஆண்டின் வெளியான படங்களில் சாதனை புரிந்த நடிகர்களில் முதலிடத்தில் இருக்கிறார் சூர்யா. அவரது நடிப்பில் கடந்த மே மாதம் வெளிவந்த 'கருப்பு' திரைப்படம் ரூ.340 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அந்த வசூலை விஜய் நடித்து வெளிவந்த 'ஜனநாயகன்' படம் கடந்ததாக விஜய் ரசிகர்கள் சொன்னார்கள். ஆனால், அது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, இந்த வருடத்தின் நம்பர் 1 வசூல் படமாக இதுவரையில் 'கருப்பு' திரைப்படம்தான் இருக்கிறது.

சூர்யா நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த மற்றொரு படமாக ஆகஸ்ட் 14ல் வெளிவந்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படமும் தற்போது 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்களைக் கொடுத்து மொத்த வசூலில் தற்போது முதலிடத்தில் உள்ளார் சூர்யா. இரண்டு படங்களின் வசூலும் சேர்த்து 500 கோடியைக் கடந்துள்ளது.

அடுத்து தமிழ் சினிமாவில் இன்னும் சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. குறிப்பாக அக்டோபர் 15ல் ரஜினிகாந்த் நடித்து வெளியாக உள்ள 'ஜெயிலர் 2' படம் தான் இந்த வருடத்தின் அதிக வசூல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுரையில் அதிக வசூல் சாதனைக்கு சூர்யா தான் சொந்தக்காரராக இருப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !