உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிறந்தநாளில் 61 புடவை மழை : நளினிக்கு தம்பி கொடுத்த பரிசு

பிறந்தநாளில் 61 புடவை மழை : நளினிக்கு தம்பி கொடுத்த பரிசு

நடிகை நளினி குறித்த ஒரு வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவருக்கு புடவையால் யாரோ அபிஷேகம் செய்வது மாதிரி, புடவை குவியல் சுற்றி அவர் நெகிழ்ச்சியுடன் அமர்ந்து இருப்பது மாதிரியான அந்த வீடியோவை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். என்ன நடந்தது, யார் கொடுத்த பரிசு என்று நளினியிடம் கேட்டால், ‛‛என் பிறந்தநாளை முன்னிட்டு என் தம்பி கார்த்திக் ஸ்வாமி கொடுத்த மறக்க முடியாத பரிசு அது.

அமெரிக்காவில் இருக்கும் அவர் என் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் ஆக வந்து, என்னை துாக்கத்தில் இருந்து எழுப்பி அந்த பிறந்தநாள் பரிசை கொடுத்தார். ஒன்றல்ல, இரண்டல்ல, 61 புடவைகளை பரிசாக கொடுத்தார். அந்த எண்ணிக்கை அதிகம் என்பதால் அப்படி என்னை சுற்றி குவிந்துவிட்டது. அந்த வீடியோ வைரல் ஆகிவிட்டது. அந்த பிறந்தநாளை, அந்த பரிசை, என் தம்பியை நான் எப்படி மறக்க முடியும்'' என்கிறார்.

நேற்று நடிகை நளினிக்கு பிறந்தநாள். அவருக்கு புடவை என்றால் கொள்ளை பிரியம். பல பேட்டிகளில் தினமும் எனக்கு புடவை அணிய பிடிக்கும், அடிக்கடி புதுப்புடவை அணிவேன் என்று சொல்லியிருக்கிறார். அக்காவுக்கு புடவை பிடிக்கும் என்பதால், அவரின் பாசக்கார தம்பி இப்படி 61 புடவைகளை பரிசாக கொடுத்து, அவரை அன்புமழையில் நனைத்து இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !